×

தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து வருகிறது: சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!

சென்னை: தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் அதிநவீன தொழில்நுட்ப பன்னாட்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கேபிட்டல் லேண்ட் டெக்னோ பார்க் என்ற தனியார் நிறுவனத்தின் சர்வதேச தொழில்நுட்ப பூங்கா திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

தமிழக தொழிற்துறையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது:

தமிழக தொழிற்துறையில் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதலீடுகளை ஈர்க்க தமிழகத்தில் உலகத்தரத்தில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பல நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து கொண்டிருக்கின்றன; அந்த வகையில் கேபிட்டா லேண்ட் நிறுவனமும் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

50,000 ஊழியர்கள் ஐ.டி. ஊழியர்கள் பணிபுரியும் வகையில் கட்டடம் கட்டப்பட்ட உள்ளது. கேபிட்டாலேண்ட் நிறுவனத்தின் 2ம் கட்ட பணிக்கும் தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். தொழில் துறையில் முதன்மை மாநிலமாக முன்னேற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் முதலீடுகள் தொடர்ந்து ஈர்க்கப்படுகின்றன:

தமிழ்நாட்டில் முதலீடுகள் தொடர்ந்து ஈர்க்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்த அரசு மீதும் தமிழ்நாடு மீதும் கேபிட்டாலேண்ட் நிறுவனம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. வால்மார்ட், ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்கள் தங்களது ஆய்வை தமிழ்நாட்டில் நிறுவியுள்ளன. 2030-க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு என்ற இலக்கை அடையும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஸ்ரீபெரும்புதூரில் புதிய தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் முதலீடுகள் அதிகரிப்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த உள்ளோம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

The post தமிழ்நாட்டில் புதிய தொழில் புரட்சி நடந்து வருகிறது: சர்வதேச தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,International Technology Park ,Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Mu. ,K. Stalin ,Chennai Pallavaram Radial Road ,CM ,Uddhav Thackeray ,Dinakaran ,
× RELATED ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 3 குழந்தைகளின் தாய் பலி