×
Saravana Stores

கேரள குண்டு வெடிப்பு சம்பவம்!: எக்ஸ் தளத்தில் வெறுப்பூட்டும் தகவல்களை பதிவிட்ட ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!!

திருவனந்தபுரம்: கேரள குண்டு வெடிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. கேரளாவில் கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் நடந்த அடுத்தடுத்த குண்டு வெடிப்புகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 12 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கேரளாவில் நடந்த குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

இதனிடையே, குண்டுவெடிப்பு தொடர்பாக வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கேரள அரசு கூறியிருந்தது. இருப்பினும், எர்ணாகுளம் குண்டுவெடிப்பு தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெறுப்பூட்டும் தகவல்களை ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதிவேற்றி இருந்தார். சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியல் என ராஜீவ் சந்திரசேகர் கருத்து தெரிவித்திருந்தார். கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

கேரள காங்கிரஸ் கமிட்டி அளித்த புகாரின் பேரில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கொச்சி போலீசார் 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் உட்பட 200-க்கும் மேற்பட்ட வலைதள பதிவுகள் வெறுப்பூட்டும் வகையில் இருந்தன. இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல், கலவரத்தை தூண்டுதல், சாதி, மதம், மொழி உள்ளிட்ட உணர்ச்சியை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் கொச்சி போலீஸ் வழக்குப்பதிவு செய்தனர். ராஜீவ் சந்திரசேகர் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் போலீஸ் வழக்குப் பதிந்தது. ஒன்றிய அமைச்சர் தவிர சுமார் 20 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கேரள குண்டு வெடிப்பு சம்பவம்!: எக்ஸ் தளத்தில் வெறுப்பூட்டும் தகவல்களை பதிவிட்ட ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது போலீஸ் வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : KERALA BOMBING INCIDENT ,UNION ,MINISTER ,RAJEEV CHANDRASEKAR ,Thiruvananthapuram ,Kerala Police ,Union Minister ,Rajiv Chandrashekar ,Kerala ,bomb blast ,bombing ,
× RELATED 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை...