×

கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு; 13 பேர் கைது..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அருகே உள்ளது சோக்காடி கிராமம். இந்த கிராமத்தில் 160 பிற்படுத்தப்பட்ட குடும்பங்களும், 90 பட்டியலின குடும்பங்களும் வசித்து வருகின்றனர். காலம் காலமாக இரு சமூகத்தை சேர்ந்த மக்களும் இணைந்து திருவிழா போன்றவற்றை நடத்தி வந்தனர். இதனிடையே, சோக்காடி கிராமத்தில் பழமைவாய்ந்த மாரியம்மன் கோயில் புனரமைப்புப்பணி நடைபெற்று வருகிறது.

அதற்காக கோயிலின் அறுகே கிரானைட் கற்கலை பாளீஸ் செய்யும் பணியானது கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது. கிரானைட் கற்கல் பாளீஸ் செய்யும் போது அருகில் உள்ள வீடுகளில் தூசி பரவுவதால், வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு பட்டியலின சமுகத்தை சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே மோதல் நிலவிய நிலையில் சோக்காடி பகுதியை சேர்ந்த அதிமுகவின் ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயம் சோக்காடி ராஜனுக்கும், பட்டியலின சமுகத்தை சேர்ந்த மக்களுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில் சோக்காடி ராஜனை அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் இருபிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் தாக்கிகொண்டும், பட்டியலின மக்களின் வீடுகளில் கற்கலை கொண்டு தாக்கியும், அங்கிருந்த ஓலைகளுக்கு தீவைத்தும் தகராரில் ஈடுபட்டனர். இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது.

இதுதொடர்பாக சோக்காடி கிராமத்தை சேர்ந்த திம்மராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில், அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜன், ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் ராமலிங்கம், ஆனந்தன், சித்தராஜ், சித்தேவன், சண்முகம், சித்தராஜ், 17 வயது சிறுவன், கண்ணன், சுமதி உட்பட 10 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ், கிருஷ்ணகிரி டிஎஸ்பி தமிழரசி வழக்குப்பதிவு செய்துள்ளார். இதில், ராமலிங்கம், ஆனந்தன், சித்தராஜ், சித்தேவன், சண்முகம், 17 வயது சிறுவன் உட்பட 7 பேரை கைது செய்தனர். இதேபோல், சித்தராஜ் அளித்த புகாரின் பேரில், அன்பரசு, முனிராஜ், வரதராஜ், குமரன், சத்தியமூர்த்தி, செல்வம், சுப்பிரமணி, திம்மராஜ், சந்தோஷ், ஆறுமுகம், சிலம்பரசன், தனுஷ், கலையரசன் உட்பட 13 பேர் மீது கிருஷ்ணகிரி அணை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், முனிராஜ், வரதராஜ், குமரன், சத்தியமூர்த்தி, செல்வம், சுப்பிரமணி உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இருதரப்பினர் அளித்த புகாரின் பேரில் 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் 13 பேரை கைது செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட எட்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜன் உட்பட 3 பேர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கிருஷ்ணகிரி அருகே சோக்காடி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு; 13 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Sokkadi village ,Krishnagiri ,Chokkadi ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் நீட் தேர்வை 5,006 மாணவர்கள் எழுதினர்