×

வலங்கைமானில் பட்டாசுகள் வெடித்து திடீர் தீவிபத்து

வலங்கைமான்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத் தெருவை சேர்ந்தவர் செந்தில். இவர் தனது வீட்டின் முன்புறத்தில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். வீட்டில் பட்டாசுகளை இருப்பு வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இருந்த பட்டாசுகளில் தீப்பிடித்தது. இதையடுத்து பட்டாசுகள் பலத்த சத்தத்துடன் வெடிக்கத் தொடங்கின. தகவல் அறிந்து வலங்கைமான் மற்றும் குடவாசல் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்குப்பின் தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு பட்டாசுகள் வெடித்து சாம்பலாயின. இந்த விபத்து குறித்து வலங்கைமான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வலங்கைமானில் பட்டாசுகள் வெடித்து திடீர் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Walangaimaan ,Valangaiman ,Senthil ,Valangaiman Keezath Street ,Tiruvarur district ,
× RELATED வலங்கைமான் ஒன்றியத்தில் 50 கிராம...