×

கெரசின், கோதுமை ஒதுக்கீடு குறைப்பு

 

கோவை, அக்.31: தமிழ்நாட்டில் 25,446 முழு நேர ரேஷன் கடை, 8,768 பகுதி நேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. மாநில அளவில் சுமார் 2.10 கோடி ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன. பெரும்பாலான வீடுகளுக்கு கேஸ் சிலிண்டர் வினியோகம் இருந்த போதிலும் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் தேவை இன்னும் இருக்கிறது. மாநில அளவில் சுமார் 55 சதவீதம் ரேஷன் கார்டுதாரர்கள் மண்ணெண்ணெய் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்க கடும் போட்டி நிலவுகிறது. ரேஷன் மண்ணெண்ணெய் கள்ள சந்தையில் விற்கப்படுவதாக புகார் கூறப்படுகிறது. ஒன்றிய அரசு, மாநில அளவில் மாதாந்திர தேவைக்காக 65 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்து வழங்கி வந்தது. கடந்த சில மாதங்களாக மண்ணெண்ணெய் ஒதுக்கீடு கணிசமாக குறைத்து வருகிறது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் லிட்டர் வரை அளவு குறைக்கப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் மாதாந்திர ஒதுக்கீடு 20 ஆயிரம் லிட்டருக்கும் கீழ் மண்ணெண்ணெய் ஒதுக்கீது குறைந்துள்ளது. மண்ணெண்ணெய் மட்டுமின்றி கோதுமை ஒதுக்கீட்டையும் ஒன்றிய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. மாதம் 25 ஆயிரம் மெட்ரிக் டன் என வழங்கப்பட்ட கோதுமை, 13 ஆயிரம் மெட்ரிக் டன்னாக குறைக்கப்பட்டது. சில கிராம ரேஷன் கடைகளுக்கு கோதுமை விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

The post கெரசின், கோதுமை ஒதுக்கீடு குறைப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Tamil Nadu.… ,Dinakaran ,
× RELATED கோவை மாவட்டத்தில் வெப்ப அலை...