×

அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

பெரம்பலூர்: பெரம்பலூரில் உள்ள பட்டாசுஉற்பத்திஆலைகள், நிரந்தர மற்றும் தற்காலிக பட்டாசுக்கடைகளை பெரம் பலூர் வருவாய்கோட்டாட்சியர் திடீர் ஆய்வு செய்தார். அரசு விதிமுறைகளை முறையாக பின்பற்றா விட்டால்விற்பனைக்குஅனுமதி மறுக்கப்படும். உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பெரம்பலூர் மாவட்டத்தில் வர இருக்கிற தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகள் மற்றும் உற்பத்தி ஆலைகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகஅரசு உத்தரவுப்படி, பெரம்பலூர் மாவட்ட கலெ க்டர் கற்பகம் அறிவுறுத்தலின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள பட்டாசு உற்பத்திஆலைகள் மற்றும் விற்பனைக் கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க 5 குழுக்கள் அமைக்கப்பட்டு அடிக்கடி ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று (30ம் தேதி)பெரம்பலூர்வருவாய் கோட்டாட்சியர் (பொ) சத்திய பால கங்காதரன் தலைமை வகித்து, பெரம்ப லூர் தாசில்தார் சரவணன், பெரம்பலூர் மாவட்ட தீய ணைப்புதுறை உதவி மாவட்ட அலுவலர் கோமதி, பெரம்பலூர் வருவாய் ஆய் வாளர் துர்காதேவி, எஸ் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசாருடன் பெரம்பலூர் பெரிய கடை வீதி, பெரியார் சிலை, நிர் மலா நகர், காந்தி சிலை, பள்ளிவாசல் தெரு, பழைய பஸ்ஸ்டாண்டு ஆகியப் பகுதி களில் உள்ள பட்டாசு கடை கள் மற்றும் பட்டாசு குடோ ன்களை ஆய்வு செய்தார்.

The post அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PERAMBALUR ,PERAM BALUR ,Dinakaran ,
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி...