×

நள்ளிரவில் பைக்குகளை திருடும் முகமூடி கும்பல் சிசிடிவி கேமிரா காட்சிகள் வைரல் செங்கம் நகரில் கைவரிசை

செங்கம், அக். 31: செங்கம் நகரில் நள்ளிரவில் முகமூடி அணிந்து பைக்குகளை மர்ம நபர்கள் திருடிச்செல்லும் சிசிடிவி கேமரா காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகரில் பல்வேறு வகைகளில் திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக வீடுகளில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகள் மற்றும் பெண்களிடம் நகை பாலிஷ் போடுவதாக கூறி நகையை கொள்ளை அடித்துச்செல்கின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியில் தனிமையில் இருக்கும் மூதாட்டிகளிடம் பேச்சை கொடுத்து உறவினர்கள் போன்றும், தெரிந்தவர்கள் போன்றும் காட்டிக்கொண்டு, அவர்களிடம் தண்ணீர் கேட்பது, சாப்பிட உணவு கேட்பது, அவர்கள் வீடுகளில் வைத்திருக்கும் நகை மற்றும் பணங்களை திருடிச்செல்வது போன்ற பல்வேறு திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வீட்டின் உட்புறமும், வீட்டின் எதிர் புறமும் இரவு பகல் நேரங்களில் விலை உயர்ந்த பைக்குகளை மர்ம நபர்கள் திருடி கைவரிசை காட்டி வருகின்றனர். தற்போது செங்கம் பழைய ராஜாஜி தெருவில் நேற்று முன்தினம் ஓய்வு பெற்ற வேளாண் துறை அதிகாரி வீட்டின் வெளியே விலை உயர்ந்த பைக் நிறுத்தப்பட்டிருந்தது. இவற்றை முகமூடி அணிந்துகொண்டு மர்ம நபர் ஒருவர் பைக்கை திருடிச்சென்றுள்ளார். மேலும் நள்ளிரவில் முகமூடி ஆசாமிகள் இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து ஆள் நடமாட்டங்களை நோட்டமிட்டு ஒருவன் இறங்குகிறான். ஒருவன் வேறு யாராவது வருகிறாரா என்று பார்த்து சிக்னல் செய்தவுடன் அந்த பைக்கின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்து சர்வ சாதாரணமாக மர்ம நபர்கள் பைக்குகளை எடுத்துச்செல்கின்றனர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

The post நள்ளிரவில் பைக்குகளை திருடும் முகமூடி கும்பல் சிசிடிவி கேமிரா காட்சிகள் வைரல் செங்கம் நகரில் கைவரிசை appeared first on Dinakaran.

Tags : Sengam Nagar ,Sengam ,Dinakaran ,
× RELATED ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள் செங்கம் பஜார் வீதியில்