×

விளாத்திகுளம் பகுதி காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு

விளாத்திகுளம், அக். 31: தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் நேற்று விளாத்திகுளம், சங்கரலிங்கபுரம் மற்றும் சூரங்குடி காவல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் நிலையங்களில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் முக்கிய வழக்கு கோப்புகளை பார்வையிட்டார். மேலும் போலீசார் மேற்கொள்ள வேண்டிய பணிகள், காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது விளாத்திகுளம் டிஎஸ்பி ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் விஜயலெட்சுமி, அனிதா, எஸ்ஐக்கள் முருகன், மாரிமுத்து, சிறப்பு எஸ்ஐ மாடசாமி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

The post விளாத்திகுளம் பகுதி காவல் நிலையங்களில் எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vlathikulam ,Tuticorin District ,SP ,Balaji Saravanan ,Sankaralingapuram ,Surangudi ,Dinakaran ,
× RELATED இந்தாண்டு போதிய மழை பெய்ததால்...