×

டெண்ட் ஹவுஸ் உரிமையாளரின் வாகனம், கார் கண்ணாடி உடைப்பு

புதுச்சேரி, அக். 31: புதுச்சேரி, சஞ்சய் காந்தி நகர், வஉசி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (34). இவர் இந்திராகாந்தி நகர், தென்னஞ்சாலை ேராட்டில் சொந்தமான டெண்ட் ஹவுஸ் கடை நடத்தி
வருகிறார். டெண்ட ஹவுஸ் சவாரிக்கு இந்த வாகனத்தில் சென்றுவிட்டு வண்டியை தனது கடை முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். இதனிடையே நேற்று முன்தினம் சிலர் கும்பலான தனது கடை முன்பு நின்று தகராறில் ஈடுபட்டிருக்கவே, இதை பாலசுப்பிரமணியன் தட்டிக் கேட்டதாக தெரிகிறது. அப்போது அவர்களில் சிலர் பாலசுப்பிரமணியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களில் ஒரு வாலிபர் அங்கு தரையில் கிடந்த சிமெண்ட் கான்கிரீட் கல்லை எடுத்து லோடு கேரியர் வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினான்.

இதைத் தொடர்ந்து அங்கு சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விஜய்ஆனந்த் என்பவரின் கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கிய கும்பல் அங்கிருந்து தப்பிஓடிவிட்டது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேங்காய்திட்டு முத்தமிழ்நகர் தமிழ் என்ற தமிழ்செல்வன் (21), உருளையன்பேட்டை பிரவீன் (19), நெல்லித்தோப்பு, பெரியார் நகர் ஜான்சன் (25) மற்றும் சக்திவேல், கருணாகரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்குபதிந்த போலீசார், தமிழ், பிரவீன், ஜான்சன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சக்திவேல், கருணாகரனை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post டெண்ட் ஹவுஸ் உரிமையாளரின் வாகனம், கார் கண்ணாடி உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Tent ,Puducherry ,Balasubramanian ,Vausi Street, Sanjay Gandhi Nagar, Puducherry ,Indira Gandhi Nagar ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் சபாநாயகர் மீதான...