×

ரஷீத்கான்: 100

ஆப்கானின் ஆல் ரவுண்டரான ரஷீத்கானுக்கு இது 100வது ஒருநாள் ஆட்டம். அது குறித்து ரஷீத் கான், ‘நாட்டுக்காக 100ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியவன் என்ற மைல்கல்லை எட்டுவது எனக்கு பெருமைதான். பெரிய சாதனை என்று நினைக்கிறேன். இந்த ஆட்டடத்தில் வெற்றி பெறுவது இன்னும் சிறப்பானதாக இருக்கும் ’ என்றார். ரஷீத் கான் இதுவரை 100 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 179 விக்கெட்களை சுழலால் சுருட்டி இருக்கிறார். மேலும் 99 ஆட்டங்களில் 1267ரன்னும் சேர்த்திருக்கிறார்.

The post ரஷீத்கான்: 100 appeared first on Dinakaran.

Tags : Rashid Khan ,Afghanistan ,Dinakaran ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி