×

ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் GS EMPOWER SKILL நிறுவனத்தின் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு தெரிந்தவர்களுக்கு வீட்டு வேலை செய்பவர் (பொது), 8ம் வகுப்பு படித்தவர்களுக்கு இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநராகவும் மற்றும் உதவி குழாய் பழுது பார்ப்பவர் (பொது), நான்கு சக்கர வாகன சேவை உதவியாளராகவும், 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வார்டுபாய் ஆண் மற்றும் பெண் உதவியாளராகவும், 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு வாடிக்கையாளர் பாரமரிப்பு நிர்வாகி அழைப்பு போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 45 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சிக்கான கால அளவு 14 நாட்கள் ஆகும். மேலும் சென்னை, விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பயிற்சி அளிக்கப்படும். இந்நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் செய்து தரப்படும். மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் மருத்துவமனை‌ தனியார் கம்பெனி, பன்னாட்டு நிறுவனங்கள் தொழிற்பேட்டை போன்ற நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். பயிற்சியினை பெற தாட்கோ இணையதளம் (www.tahdco.com)ன் மூலம் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Adi Dravidian ,Chengalpattu ,Rahul Nath ,Tamil Nadu ,Adi Dravidar Housing and Development Corporation ,TADCO ,Adi Dravidar ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...