×

கடற்கரை – திருமால்பூர் ரயில்கள் இன்று ரத்து

செங்கல்பட்டு: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: பராமரிப்பு பணி காரணமக எழும்பூர் – விழுப்புரம் பிரிவில் செயின்ட் தாமஸ் பகுதியில் இன்று காலை 10.45 மணி முதல் மதியம் 3.45 மணி (5 மணி நேரம்) ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இன்று காலை 10.18, 10.30, 10.36, 10.46, 10.56, 11.6, 11.14, 11.22, 11.30, 11.50 மற்றும் 12.00, 12.10, 12.30, 1.15, 1.30, 2.00, 2.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக தாம்பரம் – கடற்கரை இடையே இன்று காலை 9.8, 9.50, 10.30, 10.40, 11.00, 11.10, 11.30, 11.40 மற்றும் மதியம் 12.5, 12.35, 1.00, 1.30, 1.40, 2.5, 2.20, 2.50, 2.57 மற்றும் 3.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், கடற்கரை – செங்கல்பட்டு இடையே இன்று காலை 10.56, 11.40 மற்றும் மதியம் 12.20, 12.40, 1,45, 2.15, 2.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கமாக செங்கல்பட்டு -கடற்கரை இடையே இன்று காலை 11.00, 11.30 மற்றும் மதியம் 12.00, 1.00, 1.45, 2.20 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருமால்பூர் – கடற்கரை இடையே காலை 11.5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயிலும், காலை 10 மணிக்கு செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் மின்சார ரயிலும், காஞ்சிபுரம் – கடற்கரை இடையே காலை 9.30 மணிக்கு இயக்கப்படும் ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

The post கடற்கரை – திருமால்பூர் ரயில்கள் இன்று ரத்து appeared first on Dinakaran.

Tags : Beach ,Tirumalpur ,Chengalpattu ,Southern Railway ,St. Thomas ,Egmore ,Villupuram ,Dinakaran ,
× RELATED சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே...