×

கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் விவகாரம் குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட நீதிபதி கண்ணன் விசாரணை குழுவில், அந்த அறக்கட்டளையின் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் இடம்பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கோரி கல்லூரி மாணவிகள் 7 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கண்ணன் வசிாரணை குழு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

The post கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் விவகாரம் குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kalashetra College Sexual Matters Committee ,Tamil Nadu Govt. ,Chennai ,Judge ,Kannan ,Kalashetra College ,
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...