×

ஊத்துக்கோட்டையில் ரூ.36 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் ரூ.36 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் சிட்ரபாக்கம் செல்லும் சாலையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டிற்கு ரெட்டி தெரு, செட்டி தெரு, சாவடி தெரு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் யாராவது இறந்தால் அவர்களை அங்கு அடக்கம் செய்வார்கள். அவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்ய செல்லும் சுடுகாட்டு சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் சுடுகாட்டிற்கு செல்லும் சாலை அமைக்க வேண்டும் எனவும், மேலும் சிட்ரபாக்கம், கலைஞர் நகர் பகுதி மக்களும் இந்த சாலை வழியாகத்தான் தங்கள் ஊர்களுக்கு செல்வார்கள், எனவே புதிதாக சிமென்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் ரூ.36 லட்சம் அரசு நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post ஊத்துக்கோட்டையில் ரூ.36 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை பணி appeared first on Dinakaran.

Tags : Oothukottai ,Chitrapakkam ,
× RELATED ஊத்துக்கோட்டை பகுதியில் மண் பானை செய்யும் பணி தீவிரம்