×

திமுக சார்பில் இடிந்தகரை கடற்கரையில் மீனவர்களுக்கு சாலை வசதி

ராதாபுரம்: இடிந்தகரை மீனவர்கள் கடலில் மீன் பிடித்து விட்டு கரைக்கு திரும்பி வந்து, தாங்கள் கொண்டு வந்த மீன்களை வாகனங்களில் ஏற்றி மீன் விற்கும் தளத்திற்கு கொண்டு செல்கின்றனர். ஆனால், கடற்கரையில் இருந்து மீன் விற்கும் தளத்திற்கு சரியான பாதை வசதியின்றி இருந்தனர்.

இதுகுறித்து மீனவர்கள் திமுக பிரமுகரும், சமூக சேவகருமான விஜயாபதி ஏ.ஆர்.ரகுமானிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் ஆலோசனையின் பேரில் திமுக சார்பில் ஏ.ஆர்.ரகுமான் தனது சொந்த செலவில் கடற்கரையில் 800 மீட்டர் தொலைவுக்கு சாலை வசதி செய்து கொடுத்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் மீனவர் பிரதிநிதிகள் இடிந்தகரை வெனிஸ்லாஸ், ரமேஷ், ராமு, செல்சன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post திமுக சார்பில் இடிந்தகரை கடற்கரையில் மீனவர்களுக்கு சாலை வசதி appeared first on Dinakaran.

Tags : Idindakarai beach ,DMK ,Radhapuram ,Idindakarai ,
× RELATED கோபி நகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்