×

கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 17-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை!

கர்நாடகா: கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 17-க்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு சொந்தமான 75 இடங்களில் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவின் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் முறைகேடாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக லோக் ஆயுக்தா போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து காவல்துறை வருவாய்த்துறை நீர் பாசன துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணிபுரியும் 17 அதிகாரிகளுக்கு சொந்தமான கலபுறுகி, பெல்லாரி, பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களில் 75-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பெல்லாரி நகரில் வருவாய் துறை அதிகாரி மஞ்சுநாத் வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஆன மகாதேவ் பிராதர் பாட்டீல் என்பவரது வீட்டில் ரொக்கப் பணம் மற்றும் சொத்து ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சோதனையானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சோதனையின் முடிவில் எந்தெந்த அதிகாரிகள் வீட்டில் எவ்வளவு மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 17-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வீட்டில் அதிரடி சோதனை! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Lokayukta ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...