×

மயிலாப்பூர் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ.9.58 இலட்சம் வசூல்

சென்னை: மயிலாப்பூர் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடித்து இழப்பீட்டுத் தொகை ரூ.9.58 இலட்சம் வசூல் செய்துள்ளனர். 10.10.2023 அன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சென்னை அமலாக்க கோட்டத்தின் சென்னை/மையம், சென்னை/வடக்கு, சென்னை/தெற்கு, சென்னை/ மேற்கு, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் அமலாக்க அதிகாரிகள் சென்னை/மையம் மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட மயிலாப்பூர் பகுதியில் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ரூ.9,09,107/- (ரூபாய் ஒன்பது இலட்சத்து ஒன்பது ஆயிரத்து நூற்று ஏழு மட்டும்) இழப்பீட்டு தொகையாக மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகை ரூ.49,000/- (ரூபாய் நாற்பத்து ஒன்பதாயிரம் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/சென்னை கைபேசி 9445857591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

The post மயிலாப்பூர் பகுதியில் 9 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ.9.58 இலட்சம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Mylapore ,Chennai ,Dinakaran ,
× RELATED உந்துகுழாய் இணைக்கும் பணிகள்,...