×

கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு.! தீவிர விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் நேரில் ஆய்வு செய்தார். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் உள்ள களமச்சேரியில் நேற்று கிறிஸ்தவ வழிபாடு கூட்டத்தில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் குறித்து கேரள மாநில போலீசார், தேசிய பாதுகாப்பு படையினர், என்ஐஏ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், வேறு ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து, தீவிர விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு பினராயி விஜயன் அறிவுரை வழங்கினார்.

The post கேரள குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் நேரில் சென்று ஆய்வு.! தீவிர விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Pinarayi Vijayan ,Kerala ,Thiruvananthapuram ,Ernakulam, Kerala State ,Dinakaran ,
× RELATED விழிஞ்ஞம் துறைமுகத்தால் உலக...