×

மதுரையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மதுரை: மதுரையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். இன்று காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் பசும்பொன் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் மதுரையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் பழ. நெடுமாறனின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

The post மதுரையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,President of ,World Tamil Federation ,Madurai ,Phala.Nedumaran ,president ,Dinakaran ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட உத்தரவை...