×

பைடன்- ஜின்பிங் சந்திப்பு சுமூகமாக இருக்காது: சீன வௌியுறவுத்துறை கருத்து

பீஜிங்: சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக தைவான் தனி நாடாக பிரிந்து சென்றாலும், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இருநாட்டுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு கரம் நீட்டி வருவதால், சீனா கடும் கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் அடுத்தமாதம் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் பைடனும் சந்தித்து பேசவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ 3 நாள் பயணமாக வாஷிங்டன்னுக்கு சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன், அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

சீன வௌியுறவுத்துறை அமைச்சகம் தன் ட்விட்டர் பக்கத்தில், “சீன, அமெரிக்கா இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள், முரண்கள், பிரச்னைகள் நீடிக்கின்றன. இந்த பிரச்னைகளுக்கு இருநாடுகளும் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவரை சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் பைடனும் சந்திப்பது என்பது சுமூகமாக இருக்காது என வாங் யீ கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பைடன்- ஜின்பிங் சந்திப்பு சுமூகமாக இருக்காது: சீன வௌியுறவுத்துறை கருத்து appeared first on Dinakaran.

Tags : Biden-Jinping ,China ,aviation ministry ,Beijing ,Taiwan ,
× RELATED நாடு முழுவதும் நண்பகலுக்குள் விமான...