×

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஊறுகாய், நெய் எடுத்து செல்ல தடை

மும்பை: இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். விடுமுறை காலங்களில் சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும். பொதுவாக விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் தீப்பெட்டிகள், பட்டாசுகள், காய்ந்த தேங்காய், பெயிண்ட், கற்பூரம், எண்ணெய் உணவு பொருட்கள், இ-சிகரெட்டுகள், லைட்டர்கள், ஸ்ப்ரேக்கள் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்லக் கூடாது.

இந்நிலையில் மும்பை விமான நிலைய அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவில், ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடைசெய்யப்பட்ட பொருட்களை இந்தியாவில் இருந்து பயணிகள் எடுத்துச் செல்கிறார்கள். ஏற்கனவே தடை செய்யப்பட்ட பொருட்களுடன் ஊறுகாய், நெய் ஆகிய பொருட்களையும் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஆபத்தான பொருட்கள்.

அதனை மீறி எடுத்து வந்தால் விமான நிலைய சோதனையில் பறிமுதல் செய்யப்படும். அதனால் பயணிகள் தங்கள் பைகளை எடுத்துச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஊறுகாய், நெய் எடுத்து செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : UAE ,Mumbai ,India ,United Arab Emirates ,Dinakaran ,
× RELATED பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு...