×

சேரனூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு தரமற்ற ஆடுகள் வழங்கல்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே சேரனூர் ஊராட்சியில் வாழ்தார நிதியில் தரமற்ற ஆடுகள் வழங்கப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் புகார் கூறியுள்ளார். இது குறித்து சேரனூர் ஊராட்சி தலைவர் காமராஜ் கூறியதாவது: பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம் சேரனூர் ஊராட்சி கழனிவாய்ப்பட்டி கிராமத்தில் உள்ள பாக்கியம் வைரவன் என்ற பயனாளிக்கு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் உதவி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெள்ளாடுகள் மிகவும் சிறிய அளவில் உள்ள குட்டிகளை வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு வெளி சந்தையில் 3 ஆட்டு குட்டிகளின் விலை ரூ.6000 ஆகும் ஆனால் திட்ட மதிப்பீடு ரூ.13000 ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்ட ஆடுகளை எந்த தகுதியில் கால்நடை மருத்துவர்கள் சான்றுகள் வழங்யுள்ளனர் என்று வியப்பாக உள்ளது.

The post சேரனூர் ஊராட்சியில் பயனாளிகளுக்கு தரமற்ற ஆடுகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Seranur Uratsi ,SERANUR URADCHI ,PONNAMARAWATI ,Seranur ,Uratchi ,Dinakaran ,
× RELATED பணிமனை முன்பு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்