×

டாப் 8’ பங்கேற்கும் டபுள்யூடிஏ பைனல்ஸ் இன்று தொடக்கம்

காங்கூன்: உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருக்கும் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் டபுள்யூடிஏ பைனலஸ் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் இன்று தொடங்குகிறது. ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் 8 வீராங்கனைகள் தலா 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவுகளுக்கு பாகலர், செடுமல் என மெக்சிகோ நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. ரவுண்டு ராபின் லீக் ஆட்டங்களின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவார்கள்.

பாகலர் பிரிவு: சபலென்கா(25 வயது, 1வது ரேங்க், பெலாரஸ் ), ரைபாகினா (24 வயது, 5வது ரேங்க், கஜகிஸ்தான்), பெகுலா (29 வயது, 4வது ரேங்க், அமெரிக்கா), சாக்கரி (28 வயது, 6வது ரேங்க், கிரீஸ்). செடுமல் பிரிவு: ஸ்வியாடெக் (22 வயது, 2வது ரேங்க், போலந்து), கோகோ காஃப் (19 வயது, 3வது ரேங்க், அமெரிக்கா), ஆன்ஸ் ஜெபர் (29 வயது, 7வது ரேங்க், துனிசியா), வோண்ட்ருசோவா (24 வயது, 8வது ரேங்க், செக்.). இரட்டையர் பிரிவிலும் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள முன்னணி ஜோடிகள் மோத உள்ளனர். பைனல்ஸ் நவ.5ல் நடக்க உள்ளது.

The post டாப் 8’ பங்கேற்கும் டபுள்யூடிஏ பைனல்ஸ் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : WTA Finals ,Cancun ,Mexico ,
× RELATED ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஈக்வடார்...