×

வாழ்வின் பெரும்பகுதியை பழங்குடியினருடன் கழித்தேன்… அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எனக்கு நன்கு தெரியும் : பிரதமர் மோடி உருக்கம் :

டெல்லி : விடுதலை போராட்ட வீரரும் பழங்குடி இன தலைவருமான பிர்சா முண்டாவின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவாக ராஞ்சியில் உருவாக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். விடுதலை போராட்ட வீரரும் பழங்குடி இன தலைவருமான பிர்சா முண்டாவின் 146வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜார்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் அவரது நினைவாக அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆண்டுதோறும் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15ம் தேதி பழங்குடி இன கவுரவ தினமாக கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார். தனது வாழ்நாளில் பெரும் பகுதியை பழங்குடியினர் உடனேயே கழித்ததாகவும் எனவே அவர்களது இன்பங்கள், துன்பங்கள், தேவைகள், வாழ்க்கை முறைகள் குறித்து தனக்கு நன்கு தெரியும் என்று தெரிவித்தார். எனவே இந்த நாள் தனிப்பட்ட முறையில் தனக்கு உணர்வுப்பூர்வமாக உள்ளதாகவும் மோடி கூறினார். வாஜ்பாய் ஆட்சியில் ஜார்கண்ட் தனி மாநிலமாக உருவாக்கப்பட்டதையும் பழங்குடி இன நலனுக்கென தனி அமைச்சரவை உருவாக்கப்பட்டதையும் பிரதமர் மோடி நினைவுக் கூர்ந்தார். …

The post வாழ்வின் பெரும்பகுதியை பழங்குடியினருடன் கழித்தேன்… அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் எனக்கு நன்கு தெரியும் : பிரதமர் மோடி உருக்கம் : appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Delhi ,Birsa Munda ,
× RELATED குவைத் தீ விபத்தில்...