×

ஒன்றாக போராடும் உணர்வு இந்தியா கூட்டணிக்கு உள்ளது: சரத் பவார் தகவல்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மும்பையில் நேற்று அளித்த பேட்டி: விரைவில் நடக்க உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் போக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக உள்ளன. ஆனாலும், இதன் மூலம் தேசிய அளவில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்பது குறித்து இப்போதே கருத்து தெரிவிக்க முடியாது. சட்டப்பேரவை தேர்தலை பொறுத்த வரையில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்தியில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைவது என்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால், மக்களவை தேர்தலில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட வேண்டும் என்ற உணர்வு எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஒன்றாக போராடும் உணர்வு இந்தியா கூட்டணிக்கு உள்ளது: சரத் பவார் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Sharad Pawar ,Mumbai ,Congress ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே...