×
Saravana Stores

அம்மன் கோயில்களின் கம்பம் விடும் நிகழ்ச்சி

திருச்செங்கோடு, அக்.29: திருச்செங்கோட்டில், மாரியம்மன் கோயில்களின் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு பெரிய தெப்பக்குளத்தில், நேற்று காலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாரியம்மன் கோயில்களின் கம்பம் மற்றும் கும்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் உப கோயிலான பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகு முத்துமாரியம்மன், மண்ணுகுட்டை மாரியம்மன், சிஎச்பி காலனி அருள்மாரியம்மன், மலையடிவார பூமாரி அம்மன், தொண்டிகரடு கனிமுத்து மாரியம்மன் உள்ளிட்ட சுற்றுவட்டார கோயில்களில் வெள்ளிக்கிழமை அன்று பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர். மாலையில், தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இரவில் பக்தர்கள் அலகு குத்தியும், மாறுவேடம் அணிந்து பூந்தேரை எடுத்து ஆடியபடி நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். நேற்று காலை, அனைத்து மாரியம்மன் கோயில்களில் இருந்தும், கம்பங்களை ஊர்வலமாக எடுத்து வந்து பெரிய தெப்பக்குளத்தில் பூஜை செய்து குளத்தில் விட்டனர். தெப்பக்குளத்தின் நான்கு கரைகளில் இருந்தும் பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷமிடடு பூக்கள், வேப்பிலைகளை குளத்தில் தூவி வழிபட்டனர்.

The post அம்மன் கோயில்களின் கம்பம் விடும் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Amman ,Tiruchengode ,Mariamman ,Thiruchengode Periya Theppakulam ,
× RELATED திருநெல்வேலி நெல்லையப்பர்-காந்திமதி...