×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர் சங்க நிர்வாகிகள்

சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்போது 42 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 1.7.2023 முதல் 46 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25ம் தேதி உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு தலைமை செயலக ஊர்தி ஓட்டுநர்கள் சங்கம், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், சி.ஐ.டி.யு., ஹிந்த் மஸ்தூர் சபா, தொழிலாளர் விடுதலை முன்னணி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி, டிஎன்சிஎஸ்சி எம்ப்ளாயீஸ் யூனியன், தமிழ்நாடு மின் கழகம், மாநகர் போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், ஆசிரியர்கள் சங்கங்களை சார்ந்த தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மன்றம், தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் சங்கம், நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்றம் (தியோடர் ராபின்சன் பிரிவு), தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை பணியாளர் கழகம், தமிழ்நாடு கல்வித்துறை அரசு அலுவலர் சங்கம், தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக இடைநிலை மற்றும் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் மன்றம், டாக்டர் ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம், நர்சுகள் பொது நலச்சங்கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு, தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை பணியாளர்கள் சங்கம், ஜேஎஸ்ஆர் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது அமைச்சர் சிவசங்கர், நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர் சங்க நிர்வாகிகள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Tamil Nadu ,Government Servants ,Teachers Unions ,
× RELATED உழவர் பெருமக்களது வாழ்வுக்கும்...