×

இந்த ஆண்டின் கடைசி ச‌ந்திர‌கிர‌க‌ண‌த்தினை க‌ண்டு ர‌சிக்க‌ அப்ச‌ர்வேட்ட‌ரி பகுதியில் உள்ள வான் இய‌ற்பிய‌ல் ஆய்வகத்தில் சிற‌ப்பு ஏற்பாடு

இந்த ஆண்டில் நடைபெற உள்ள கடைசி ச‌ந்திர‌கிர‌க‌ண‌த்தினை க‌ண்டு ர‌சிக்க‌ அப்ச‌ர்வேட்ட‌ரி பகுதியில் உள்ள வான் இய‌ற்பிய‌ல் ஆய்வகத்தில் சிற‌ப்பு ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்பட்டுள்ள‌து. இதில் குறிப்பாக இரண்டு பெரிய‌ தொலைநோக்கிக‌ளில் ச‌ந்திர‌கிர‌க‌ண‌த்தினை காண்ப‌த‌ற்கு பிர‌த்யேக‌ ஏற்பாடுகள் செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும், வ‌ர‌க்கூடிய‌ பொதும‌க்க‌ள் ம‌ற்றும் சுற்றுலாப்ப‌ய‌ணிக‌ள் அனைவ‌ரும் க‌ட்ட‌ண‌மின்றி இந்த நிகழ்வினை க‌ண்டு ர‌சித்து செல்ல‌லாம் என‌வும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும், ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம் நிக‌ழ்வு குறித்து எடுத்துரைக்க‌வும், ச‌ந்திர‌கிர‌க‌ண‌ம் தொட‌ர்பான‌ ச‌ந்தேக‌ங்க‌ளை தீர்க்க‌வும் விஞ்ஞானிக‌ள் த‌யாராக‌ இருப்பதாகவும் அப்ச‌ர்வேட்ட‌ரி வான் இய‌ற்பியல் ஆய்வக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், மேலும் இன்று ந‌டைபெற‌ உள்ள‌ ச‌ந்திர‌ கிர‌க‌ண‌ நிகழ்வானது இன்று இர‌வு 11.30 ம‌ணிக்கு துவ‌ங்கி ந‌ள்ளிர‌வு 1 ம‌ணி 5 நிமிட‌ங்க‌ளுக்கு அதிக‌ இருள் சூழ்ந்து , 1 ம‌ணி 44 நிமிட‌ங்க‌ளுக்கு உச்ச‌த்தில் இருக்கும் என‌வும் இது 6 ச‌த‌விகித‌ம் வ‌ரை நாம் காண முடியும் என‌வும் மேலும் ம‌ணிக்கு இந்த நிகழ்வு அதிகாலை 4.25 நிமிடங்களுக்கு முடிவ‌டைவ‌தாக‌வும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த‌ ச‌ந்திர‌ கிர‌க‌ண‌த்தினை வெறும் க‌ண்களால் பார்க்க‌லாம், இத‌னால் எந்த‌ ஒரு பாதிப்பும் ஏற்ப‌டாது என‌வும், அடுத்த வருடத்தில் இந்த சந்திர கிரகணம் தெரியாது எனவும், அதற்கு அடுத்த ஆண்டான‌ 2025-இல் தான் தெரியும் எனவும் தெரிவித்தார், அதே போல வரும் 2031 ஆம் ஆண்டு மே 21ம் தேதி தமிழ்நாட்டில் ம‌துரையை சுற்றியுள்ள ப‌குதிக‌ளில் 92 சதவீதம் முழு சூரிய கிரகணம் தெரிய உள்ளதாகவும், இது மிக‌ப்பெரிய‌ நிக‌ழ்வாக‌ பேச‌ப்படும் என‌வும் இது குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் கண்காணித்தும் ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ள‌து

The post இந்த ஆண்டின் கடைசி ச‌ந்திர‌கிர‌க‌ண‌த்தினை க‌ண்டு ர‌சிக்க‌ அப்ச‌ர்வேட்ட‌ரி பகுதியில் உள்ள வான் இய‌ற்பிய‌ல் ஆய்வகத்தில் சிற‌ப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Aeronautical Observatory ,Rashik Observatory ,Air Physics Laboratory ,Dinakaran ,Vonaphysical Observatory ,
× RELATED குஜராத்தில் ரூ.300 கோடி போதைப்பொருட்கள் பறிமுதல்