×

ஓரே பாரதம், உன்னத பாரதம் நிகழ்ச்சியால் சர்ச்சை: பெரியார் பல்கலை.க்கு கொளத்தூர் மணி கண்டனம்

சென்னை: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஓரே பாரதம், உன்னத பாரதம் என்ற தலைப்பில் இந்திய கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியாரின் பெயரில் இயங்கும் பல்கலைக்கழகத்தில் ஓரே பாரதம், உன்னத பாரதம் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து X இணைய தளத்தில் பதிவிட்டுள்ள திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி பல்கலைக்கழக பதிவாளர் அனுப்பியுள்ள இந்த சுற்றறிக்கை, தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் திட்டத்தினை புகுத்துவது போல இந்த சுற்றறிக்கை உள்ளதாக குறிப்பிட்டுள்ள கொளத்தூர் மணி. இந்தியா, பாரதம் என்ற சர்ச்சை ஓய்வதற்குள் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவது தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிரானது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு, பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல், மதப் பிரச்சனைகளை புகுத்துவது என தொடர்ந்து பல்வேறு புகாருக்குளான பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது புதிய சர்ச்சை முளைத்துள்ளது.

The post ஓரே பாரதம், உன்னத பாரதம் நிகழ்ச்சியால் சர்ச்சை: பெரியார் பல்கலை.க்கு கொளத்தூர் மணி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Ore Bharatham ,Unnatha Bharatham ,Periyar University ,Kolathur mani ,Chennai ,Ore Bharatam ,Salem Periyar University ,Dinakaran ,
× RELATED அரசால் சஸ்பெண்ட் செய்ய...