×

மூதாட்டி தற்கொலை

ஈரோடு: ஈரோடு, திண்டல், வித்யா நகரைச் சேர்ந்தவர் திலகவதி (71). இவர் தனியாக வசித்து வந்தார். அவரை கவனித்துக் கொள்ளவும், வீட்டு வேலைகள் செய்யவும் காந்திமதி என்பவரை திலகவதியின் மகள் நியமித்து இருக்கிறார். திலகவதிக்கு அல்சர் நோய் பாதிப்பு இருப்பதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த 25ம் தேதி மாலை 4 மணியளவில் காந்திமதி ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து, காந்திமதி ஜன்னல் வழியாக பார்த்தபோது, பேன் மாட்டும் கொக்கியில், திலகவதி துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து, திலகவதியின் மகள் கங்கா (43) நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post மூதாட்டி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Tilakavathy ,Vidya Nagar, ,Dindal, Erode ,
× RELATED ஈரோட்டில் சொத்து வரி பாக்கி...