×

நோயாளியை தூளி கட்டி தூக்கி செல்லும் அவலம்

ஏற்காடு: ஏற்காடு மலைக்கிராமத்தில் சாலை வசதி இல்லாததால், நோயாளியை தூளி கட்டி தூக்கி செல்லும் அவலம் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஏற்காட்டில் 60க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இதில் ஒன்று கெடக்காடு. இங்கு சாலை வசதி இல்லாததால், இந்த கிராமத்தில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர்கள், குழந்தைகள், முதியவர்கள் சேரும் சகதியுமான சாலையை 2 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கரியமலை (45), இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் கீழே விழுந்ததில் பலத்தகாயம் அடைந்தார். அவரை மலைக்கிராம மக்கள் தூளி கட்டி சேறும் சகதியுமான மண்சாலையில் 2 கிலோ மீட்டர் வரை தூக்கி ஏற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மலைப்பகுதியில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகளை தூளியில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளதால், சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நோயாளியை தூளி கட்டி தூக்கி செல்லும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Yercaud ,Dinakaran ,
× RELATED மாவட்டத்தில் 85% பேருக்கு விநியோகம்