×

வேடியப்பன்-அம்சாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

அயோத்தியாப்பட்டணம்: அயோத்தியாப்பட்டணம் அடுத்த உடையாப்பட்டி பகுதியில் பழமை வாய்ந்த வேடியப்பன் அம்சாரம்மன்கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த சில நாட்களுக்கு முன் சீரமைக்கப்பட்டு, நேற்று காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக, நேற்று காலை உடையாப்பட்டி கருமாரியம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து வருதலும், இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூலமந்திர ஹோமங்கள் நடைபெற்றது.

The post வேடியப்பன்-அம்சாரம்மன் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Vediyappan-Amsaramman Temple ,Ayodhyapatnam ,Vediyappan Amsaramman temple ,Odiyapatti ,Vediyappan ,-Amsaramman Temple ,Kumbabhishek ,
× RELATED திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு