வந்தவாசி,அக்.28: எலும்பு முறிவு சிகிச்சைக்கு நோயாளியிடம் பேரம் பேசிய அரசு டாக்டர் ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் நெமந்கார தெருவைச்சேர்ந்தவர் சபையா(60). இவர் நேற்று முன்தினம் தவறி கீழே விழுந்ததில் கை எலும்பு முறிந்துள்ளது. உடனடியாக உறவினர்கள் அவரை வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த டாக்டர் பரிசோதனை செய்து எக்ஸ்ரே எடுத்து வரும்படி கூறியுள்ளார். அவர் தனியார் ஸ்கேன் சென்டரில் எக்ஸ்ரே எடுத்து வந்த பின்னர் மீண்டும் பார்த்த டாக்டர், எலும்பு சிகிச்சைக்கான மருத்துவர் இன்று விடுமுறையில் உள்ளார். அவரை தொடர்புக்கொள்ளுங்கள், அவர் ஆலோசனை வழங்குவார் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் எலும்பு சிகிச்சை மருத்துவரான அருண் தொலைபேசி எண்ணை கொடுத்து தொடர்பு ெகாள்ள வைத்துள்ளனர். அவரிடம் சமையாவின் உறவினர் தொடர்பு கொண்டு பேசினார். அதில் மருத்துவர் அருண், ‘எக்ஸ்ரே பார்த்தேன் எலும்பு உடைந்துள்ளது. அறுவை சிக்சை செய்தால் பழைய நிலைக்கு வரும் என கூறியுள்ளார். அதற்கு ₹35 ஆயிரம் செலவாகும் என கூறினார். மேலும் எலும்பு உடைந்த நிலையிலேயே வளர்ந்துவிடும் இதனால் பெரும் சிரமம் ஏற்படும். ₹35 ஆயிரம் செலுத்தினால் வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நானே செய்து விடுகிறேன்’ என கூறினார். அதற்கு அவர்கள் நாங்கள் ₹15 ஆயிரம் தருகிறோம் எனகூறியுள்ளனர். அதற்கு அருண் ₹15 ஆயிரம் சிகிச்சை கூடத்திற்கே செலுத்த வேண்டும்.
மருந்து, மாத்திரை உபகரண பொருட்கள் வாங்க வேண்டி உள்ளது. மருத்துவர் கட்டணம் வெறும் ₹3 ஆயிரம் தான் கிடைக்கும். எனவே நீங்கள் ₹30 ஆயிரம் கொடுங்கள் என கூறினார். அவ்வளவு பணம் இல்லை எனக்கூறிய பின்னர் நீங்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்று தாமதமானால் கை பழைய நிலைமையில் செயல்படாது. பணத்தை தயார் செய்தால் நாளைக்கே (நேற்று) அறுவை சிகிச்சை செய்துவிடலாம் என மருத்துவர் கூறுகிறார். சரி நான் பணம் தயார் செய்துவிட்டு வருகிறேன் என கூறி தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார் உறவினர். இந்த ஆடியோ பதிவு தற்போது வந்தவாசி பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்ைப ஏற்படுத்தி வருகிறது.
The post எலும்பு முறிவு சிகிச்சைக்கு நோயாளியிடம் பேரம் பேசிய அரசு டாக்டர் சமூக வலை தளங்களில் ஆடியோ வைரல் வந்தவாசி அரசு மருத்துவமனையில் பரபரப்பு appeared first on Dinakaran.
