×

மெஞ்ஞானபுரம் அருகே மனைவிக்கு கத்தி வெட்டு கணவருக்கு வலை

உடன்குடி, அக். 28: மெஞ்ஞானபுரம் அருகே உள்ள பிள்ளைவிளை வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(31). இவரது மனைவி கவிதா(21). குடிப்பழக்கம் உடைய முத்துக்குமார், மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 14ம் தேதி தம்பதியினர் இடையே தகராறு ஏற்டவே, முத்துக்குமார் மனைவியை தாக்கி கத்தியால் தலையில் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் மெஞ்ஞானபுரம் எஸ்ஐ விஜயதாஸ் வழக்கு பதிந்து விசாசாரணை நடத்தி முத்துக்குமாரை தேடி வருகிறார்.

The post மெஞ்ஞானபுரம் அருகே மனைவிக்கு கத்தி வெட்டு கணவருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Menjananapuram ,Udengudi ,Muthukumar ,Pillavilai Vedakoil Street ,Menjnanapuram ,Kavita ,
× RELATED மெஞ்ஞானபுரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குடும்ப கூடுகை விழா