×

அரியலூர் மாவட்டத்தில் 14.8 டன் விதை நெல் கையிருப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமை வகித்தார். இதில் கலெக்டர் தெரிவித்ததாவது: அரியலூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 954 மி.மீ. நடப்பாண்டில் இம்மாதம் வரை 429.24 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 2361 மெ.டன் யூரியா, 1082 மெ.டன் டி.ஏ.பி 615 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1874 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பு உள்ளது.

The post அரியலூர் மாவட்டத்தில் 14.8 டன் விதை நெல் கையிருப்பு appeared first on Dinakaran.

Tags : Ariyalur district ,ARYALUR ,DEPLETION DAY ,Annie Mary ,Dinakaran ,
× RELATED நெல் வயலில் பாசி கட்டுப்பாடு...