×

₹2.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் கூட்டுறவு சங்கத்தில் நேற்று விவசாயிகள் கொண்டுவந்த 60 மூட்டை கொப்பரை ₹2.50 லட்சத்துக்கு விற்பனையானது. திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் நேற்று கொப்பரை ஏலம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 60 மூட்டை கொப்பரையை ஏலத்துக்கு கொண்டு வந்தனர். விவசாயிகள் முன்னிலையில் அதிகாரிகள் ஏலத்தை நடத்தினர். இதில் முதல் தரம் கொப்பரை கிலோ ₹76.35 முதல் ₹85.05 வரையிலும், 2ம் தரம் கொப்பரை கிலோ ₹62.65 முதல் ₹73.35 வரையிலுமாக மொத்தம் ₹2.50க்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் நவம்பர் 3ம்தேதி நடைபெறும் என மேலாளர் கணேசன் தெரிவித்தார்.

The post ₹2.50 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Tiruchengode Agriculture… ,Coppice ,
× RELATED கோயில் பூட்டு உடைக்கப்பட்டு திறப்பு