×

புலி பல் இருப்பதாக புகார்கர்நாடக அமைச்சர் வீட்டில் வன அதிகாரிகள் சோதனை

பெங்களூரு: கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பாள்கரின் மகன் உள்பட உறவினர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் பென்டென்டில் புலிபல் பதித்திருக்கும் புகைப்படம் அண்மையில் வெளியானது. இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் பெலகாவில் உள்ள லட்சுமி ஹெப்பாள்கர் வீட்டிற்கு நேரில் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது புலி பல் பொருத்திய செயினை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். தனது மகள் திருமணத்தின் போது, யாரோ பரிசு கொடுத்த செயின் இது. அதில் இருக்கும் புலி பல் ஒரிஜினல் கிடையாது. பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்டது என்று அமைச்சர் தெரிவித்தார். இருப்பினும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி உறுதி செய்வதாக கூறி அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

The post புலி பல் இருப்பதாக புகார்கர்நாடக அமைச்சர் வீட்டில் வன அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Forest ,minister ,Bangalore ,Karnataka Women and ,Child Welfare Minister ,Lakshmi Heppalkar ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல் நலம்...