×

தனிநபர் சட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு

புதுடெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து ஒன்றிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் தனிநபர் சட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைகுழு மறு ஆய்வு செய்ய முடிவெடுத்துள்ளது. நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு ஒன்றிய பாஜ அரசு முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மத அமைப்புகள் மற்றும் பொது மக்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று ஒன்றிய சட்ட ஆணையம் கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தது. இந்நிலையில் தனிநபர் சட்டங்கள் குறித்து மறு ஆய்வு செய்வதற்கு சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு முடிவு செய்துள்ளது. வாரிசுரிமை,தத்தெடுப்பு உள்ளிட்டவை தனிநபர் சட்டங்களின் கீழ் வருகிறது. சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக பாஜ எம்பி சுஷில் குமார் மோடி உள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ரிமோட் முறை மற்றும் இ- போஸ்டல் முறையில் வாக்களிக்கும் முறையை கொண்டுவருவது பற்றியும் இந்த நிலைக்குழு ஆய்வு செய்ய உள்ளது. ஆனால் இந்த விவகாரம் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் இடையே விவாதிக்கப்பட்டு தற்போது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post தனிநபர் சட்டங்கள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Parliamentary Standing Committee ,on ,New Delhi ,Union Law Commission ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...