×

கோவை மத்திய சிறை எஸ்பியால் உயிருக்கு ஆபத்து கணவரை புழல் சிறைக்கு மாற்ற கோரி மனைவி வழக்கு: சிறை நிர்வாகம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மதுரையில் நடைபெற்ற குற்ற சம்பவம் தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு கைதான திருச்சியை அவரது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டார். திருச்சி சிறை எஸ்.பி. செந்தில்குமாருக்கும், காளிமுத்துக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட பிரச் னை தொடர்பாக எஸ்.பி. அளித்த புகாரில் காளிமுத்து மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பூந்தமல்லியில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, போதை பொருள் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட காளிமுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

தற்போது கோவை சிறையின் கண்காணிப்பாளராக செந்தில்குமார் இருப்பதால், கணவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறி, அவரை புழல் சிறைக்கு மாற்றுமாறு உத்தரவிடக் கோரி காளிமுத்துவின் மனைவி திவ்யா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் பரத சக்கரவர்த்தி, லக்‌ஷ்மி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் திவ்யா தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நதியா ஆஜராகி, திருச்சியில் சிறையில் இருந்தபோது சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கும், காளிமுத்துவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதால் மனுதாரரின் கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழ்நாடு அரசு, கோவை சிறை நிர்வாகம் ஆகியவை ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

The post கோவை மத்திய சிறை எஸ்பியால் உயிருக்கு ஆபத்து கணவரை புழல் சிறைக்கு மாற்ற கோரி மனைவி வழக்கு: சிறை நிர்வாகம் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Central Jail SP ,Puzhal Jail ,Court ,Chennai ,Trichy ,Madurai ,Puzhal ,Jail ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை விசாரணை முடிந்து ஜாபர் சாதிக் புழல் சிறையில் அடைப்பு