×

மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

திருப்பூர்: கைத்தறி நெசவாளர்கள் தாங்கள் நெய்யும் துணி ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பேட்டியளித்த அவர்; இந்த புகாரை முன்வைத்தார். காங்கேயத்தில் அதிமுக நிர்வாகி திருமண விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பின்னர் காங்கேயம் அண்ணா பேருந்து நிலையம் அருகே அதிமுக கொடியை ஏற்றி வைத்து உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி; கொப்பரை தேங்காய்க்கு போதிய விலை கிடைக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். மின்சாரம் எப்போது வரும், வராது என தெரியாமல் நெசவாளர்கள் அவதியுறுகின்றனர். நெசவாளர்களின் துணிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. மக்கள் வருமான இன்றி வாடுவதாகவும் புகார் தெரிவித்தார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு மக்கள் அமோக வெற்றியை தர வேண்டும் என எடப்பாடி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post மக்களவை தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Atamuga ,Edappadi Palanisami ,Tiruppur ,High Commissioner ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் இருந்து...