×

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்காக மட்டும்தான்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து


மதுரை: பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்காக மட்டும்தான் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கல்யாணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில்; இலஞ்சியில் ராமசாமிபிள்ளை பள்ளியில் 1994ம் ஆண்டில் ஆசிரியையாக சேர்ந்து பணியாற்றுகிறேன். என்னை நிரந்தர ஆசிரியை பணியிடத்தில் நியமிக்காமல், வேறொருவரை தியமித்துள்ளனர். வேறொருவரை நியமித்ததை ரத்து செய்து தன்னை நிரந்தர ஆசிரியையாக பணியமர்த்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது; மனுதாரருக்கு உரிய கல்வி தகுதி இல்லை என கூறி, ஊக்கத்தொகை, பதவி உயர்வு தர பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. தகுதி தேர்வில் மனுதாரர் 68.6% மதிப்பெண் பெற்றபோதும், அவருக்கு பதவி உயர்வு பணி நியமன குழுவும் நிராகரித்துள்ளது. பள்ளி நிர்வாகம் பாரபட்சமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது; தமிழாசி-என்பவரை நியமித்தது ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்த நீதிபதி; பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்காக மட்டும்தான்.

அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகம் தனியாக நிர்வாகத்தை நடத்தி, அரசுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடாது. மானியம் பெறும் கல்வி நிறுவனங்களை முறையாக நடத்தவில்லை எனில் தேவையின்றி வழக்கு தொடர்ந்து நேரத்தை விணடிக்கக் கூடிய சூழல் ஏற்படும். அரசின் நேரத்தை வீணடித்தால் மானியத்தை திரும்பப் பெற வேண்டும். தவறான அணுகுமுறையால் இதுபோன்ற வழக்குகள் அரசின் தேரம், பணத்தை வீணடிப்பதோடு நிர்வாகத்தையும் பாதிக்கிறது என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

The post பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அரசு வழங்கும் நிதி சமூக நலனுக்காக மட்டும்தான்: உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court Madurai Branch ,Madurai ,Supreme Court ,Dinakaran ,
× RELATED ஒருவரின் கல்விச் சான்றிதழ் மீது...