×

ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது: சீமான்

சென்னை: ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான், விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை நான் ஆமோதிக்கிறேன் என்றார்.

ஆனால், விடுதலைப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்பதை சொல்ல தகுதி மற்றும் நேர்மை ஆளுநருக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். வல்லபாய் படேலுக்கு சிலை வைத்துள்ளார். அதே வ.உ.சி-க்கு சிலை வைத்திருக்கிறாரகளா? வ.உ.சி-யை விட பெரிய ஆளா வல்லபாய் படேல்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஆளுநர் தனது வேலையை மட்டும் பார்த்தால் இதுபோன்ற பிரச்னைகள் உருவாகியிருக்காது: சீமான் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Chennai ,Naam Tamilar Party ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும்...