×

ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

சென்னை: சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதனைப் பற்ற வைத்து நேற்று முன்தினம் (25.10.2023) பிற்பகல் ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசியுள்ளார். உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இவர் மீது வெடிப்பொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ரவுடி கருக்கா வினோத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

நவம்பர் 9 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ரவுடி கருக்கா வினோத் நேற்று 26.10.2023) காலை 06.30 மணியளவில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ரவுடி கருக்கா வினோத்தை விசாரிக்க காவல் துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரவுடி கருக்கா வினோத்தை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் காவல்துறையினர் ரவுடி கருக்கா வினோத்தை ஆஜர்படுத்த உள்ளனர்.

The post ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்! appeared first on Dinakaran.

Tags : Rawudi Karuka Vinom ,Saithapet Court ,Chennai ,Rauudi Karuka Vinod ,Chennai Tenampet ,Rawudi Karuka Vinod ,Dinakaran ,
× RELATED சென்னை அடுத்த ஆவடி அருகே ரோந்து...