×

ஐடி, ஈடி, சிபிஐ என திரிசூல ஆட்சி நடத்தும் ஒன்றிய மோடி அரசு: கி.வீரமணி தாக்கு

புதுச்சேரி: குலத்தொழிலை திணிக்கும் ஒன்றிய பாஜக அரசின் திட்டத்தை எதிர்த்து தொடர் பயண பொதுக்கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் புதுச்சேரி முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே நேற்று இரவு நடந்தது. இதில் தி.க தலைவர் கி.வீரமணி பேசியதாவது: மத்தியில் மக்கள் விரோத, ஆர்எஸ்எஸ், பாஜக, மோடி அரசு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை என மூன்றையும் திரிசூலம் போல் வைத்து ஆட்சியை நடத்தி வருகிறார்கள். விஸ்வகர்மா யோஜனா மூலம் குல கல்வி திட்டத்தை மீண்டும் கொண்டுவர பார்க்கிறார்கள்.

வரவுள்ள 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி உறுதி. ஏற்கனவே தென் இந்தியாவில் பாஜவுக்கு கதவு சாத்தப்பட்டு விட்டது. கூட்டணிக்கு இந்தியா என பெயர் வைத்தவுடன், இப்போது பாஜகவுக்கு இந்தியா என்ற பெயரை கேட்டாலே குமட்டுகிறது. நாங்கள் எல்லாம் தீயணைப்பு வீரர்கள். மதவெறி தீ, சாதிவெறி தீ, பதவிவெறி தீ. அனைத்தும் அணைக்கப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றிபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

The post ஐடி, ஈடி, சிபிஐ என திரிசூல ஆட்சி நடத்தும் ஒன்றிய மோடி அரசு: கி.வீரமணி தாக்கு appeared first on Dinakaran.

Tags : Union Modi government ,ED ,CBI ,K. Veeramani Thaku ,Puducherry ,Dravidar Kazhagam ,Union BJP government ,
× RELATED ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு பேட்ஜ் ஆர்ப்பாட்டம்