×

தமிழ்நாடு மிக அமைதியான மாநிலமாக உள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்

சென்னை: தமிழ்நாடு மிக அமைதியான மாநிலமாக உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி, சென்னை பாதுகாப்பான நகரம் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஆளுநருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆளுநர் மாளிகையில் 253 காவலர்கள் பணியில் உள்ளனர்; ஆளுநர் எங்கு சென்றாலும் பாதுகாப்பு வழங்குகிறோம். ஆளுநருக்கான பாதுகாப்பில் காவலர் பற்றாக்குறை என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தெரிவித்தார்.

The post தமிழ்நாடு மிக அமைதியான மாநிலமாக உள்ளது: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DGP ,Shankar Jiwal ,Chennai ,
× RELATED போலீசாருக்கான மகிழ்ச்சி திட்டம்...