×

கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போட்டி திருவண்ணாமலையில் நடந்தது விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான

திருவண்ணாமலை, அக்.27: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான கூடைப்பந்து, ஹாக்கி, கைப்பந்து போட்டிகள் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நடத்தப்படும் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன், திருவண்ணாமலை விளையாட்டு விடுதி மேலாளர் சண்முகப்பிரியா மற்றும் பயிற்சியாளர்கள் போட்டிகளை நடத்தினர்.

அதில், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, பெரம்பலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு விடுதி மாணவிகள் சுமார் 200 பேர் பங்கேற்றனர். மேலும், 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர் என 2 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், கைப்பந்துப் போட்டியில் 14 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில், திருவண்ணாமலை அணி பதக்கங்களை வென்றது. அதேபோல், 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நடந்த ஹாக்கி மற்றும் கூடைப்பந்து பேட்டிகளிலும் திருவண்ணாமலை அணி வென்றது. இப்போட்டிகளில் தகுதி பெற்ற வீரர்கள், கோவை மற்றும் தேனியில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.

The post கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போட்டி திருவண்ணாமலையில் நடந்தது விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Thiruvannamalai District Sports Hall ,Thiruvannamalai… ,Tiruvannamalai ,
× RELATED திருவண்ணாமலையில் கோரிக்கைகளை...