×

போலி பட்டா தயார் செய்த பாஜ நிர்வாகி மீது வழக்கு

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வள்ளலார் நகர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். சங்கராபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினராகவும், பாஜ உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில நிர்வாகியாகவும் உள்ளார். கற்பக விநாயகர் நகர் பகுதியை சேர்ந்த முத்து மனைவி ராமு. இவர், ரஞ்சித்குமார் இணைந்து அப்பகுதியில் உள்ள ஒருவரின் 4.50 சென்ட் இடத்தை போலி பட்டா மூலம் ராமுவின் பெயருக்கு மாற்றியதாக தெரிகிறது. பட்டா மாற்றம் காரைக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பதிவானதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பாண்டிச்செல்வம், காரைக்குடி தாசில்தாருக்கு புகார் கொடுத்தார். அதில், முத்து மனைவி ராமு பெயரில் பட்டா எதுவும் வழங்கப்படவில்லை; போலியாக பட்டா தயார் செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார். இந்த புகார் குறித்து, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் பாண்டிச்செல்வம், காரைக்குடி கோர்ட்டில் பாஜ நிர்வாகி ரஞ்சித்குமார், முத்து மனைவி ராமு மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். கோர்ட் உத்தரவின்படி, 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

The post போலி பட்டா தயார் செய்த பாஜ நிர்வாகி மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Karaikudi ,Ranjith Kumar ,Vallalar Nagar, Sivagangai District ,Sankarapuram Panchayat Ward ,BJP Local Government ,
× RELATED மதுரை பாஜக மாவட்ட செயலாளர் கொலை வழக்கில் 5 பேர் கைது..!!