கொல்கத்தா: மேற்குவங்கத்தில் குடும்ப அட்டை விநியோகத்தில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமைச்சர் ஜோதிப்ரியோ மல்லிக் வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
மேற்குவங்க வனத்துறை அமைச்சராக இருப்பவர் ஜோதிப்ரியோ மல்லிக். இவர் உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்தபோது குடும்ப அட்டை விநியோகத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு பிரிவின்கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் உள்ள ஜோதிப்ரியோ மல்லிக்கின் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளில் 8 அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதேபோல் மல்லிக்கின் முன்னாள் தனி உதவியாளரின் டம் டம் பகுதியில் உள்ள வீடு, அலுவலகங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
The post மே.வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.