×

மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் 22 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவில் மதுபான விடுதியில் மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 22 பேர் பலியானார்கள். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் லெவிஸ்டன் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்மநபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். மதுபான விடுதி, பவுலிங் விளையாட்டு மையம், ஓட்டலில் இருந்தவர்கள் மீது என அந்த நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டான்.

இதில் அங்கிருந்தவர்கள் அலறி கூச்சலிட்டபடி சிதறி ஓடினார்கள். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி சென்றான். துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர். காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூடு நடத்திய நபரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது.

 

The post மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு அமெரிக்காவில் 22 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Bar ,US ,Washington ,United States ,America ,
× RELATED காசா தாக்குதலை கண்டித்து இஸ்ரேலிய...