×

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதி பணியாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணியாற்றுவோரின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.
சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர், காப்பாளர், நிர்வாக ஊழியர் சங்கம் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.

அப்போது அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பணிபுரியும் ஆசிரியர், காப்பாளர், நிர்வாக ஊழியர் சங்கம் மற்றும் துப்புரவு பணியாளர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை, மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல பள்ளிகள் மற்றும் விடுதி பணியாளர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Minister ,Kayalvizhi Selvaraj ,CHENNAI ,
× RELATED ஊராட்சி தலைவர்களுக்கு வன்கொடுமை...